ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறிய "விசாரணை" திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விசாரணை" திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.

இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...